Home /namakkal /

Namakkal | மகிழ்ச்சி செய்தி... நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து..

Namakkal | மகிழ்ச்சி செய்தி... நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து..

நாமக்கல் ஆஞ்சநேய கோவில்

நாமக்கல் ஆஞ்சநேய கோவில்

Namakkal | நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் நடைமுறையில் இருந்து வந்த 20 ரூபாய் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற நரசிம்மர் கோயிலுக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில். எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் காட்சி தந்தவாரு இருக்கும் இக்கோயிலுக்கு தனிச்சிறப்பு என்னவென்று கேட்டால் கோபுரம் கிடையாது. வெயிலிலும், மழையிலும், காற்றிலும் அதேப்பொலிவுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறார்.

    மேலும் 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயர் தமிழ்நாட்டிலே வேற எங்க இல்லாத சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது. அதனால், பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசிக்க வருகை புரிவார்கள்.

    இந்த நிலையில் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் நடைமுறையில் இருந்து வந்த ரூபாய் 20 சிறப்பு தரிசனம் பல மாதங்களாக இருந்தது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்து வந்தது. தற்போது இந்த 20 ரூபாய் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்.

    நாமக்கலிலிருந்து ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லும் கூகுள் வரைபடம்...

    ஆஞ்சநேய கோவிலுக்கான கூகுள் வழி


    இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் நடைமுறையில் இருந்து வந்த ரூபாய் 20 ரூபாய் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

    இதனிடையே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் நரசிம்ம சுவாமி கோயில், அரங்கநாத சுவாமி கோயில்களில் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 20 ரூபாய் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து இன்று முதல் ரூபாய் 20 கட்டண சிறப்பு தரிசனம் ரத்து அமலுக்கு வந்துள்ளது. மேலும் இதன் காரணமாக நாமக்கல் ஆஞ்சநேயரை பக்தர்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் இலவசமாக தரிசனம் செய்ய உள்ளனர். மேலும் கோயில் குடமுழுக்கு விழா விரைவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    செய்தியாளர்: மதன், நாமக்கல்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி