நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த அழகு முத்து மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு வெற்றிலை அலங்காரம் செய்து அம்பாள் மக்களுக்கு காட்சி அளித்தார்.
ஒவ்வொரு கோவில்களிலும் உள்ள கடவுள்களை அலங்கரிப்பதன் மூலம் நம் கண்கள், மனது இறைவனை தவிர வேறு எதையும் பார்க்க நினைக்காது. எண்ணங்கள் முழுவதும் இறைவனை மட்டுமே நினைக்கும். இதன் மூலம் மனது அமைதி கொண்டு இறைபக்தியில் மூழ்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் தங்க நகைகளையும், வைர வைடூரியங்களையும் மற்றும் விதவிதமான மலர்களையும் கொண்டு அலங்கரிப்பதால் பக்தர்கள் மனதில் உருவம் நன்றாக பதிந்து கோவிலிற்கு சென்ற உணர்வுகள் எப்பொழுதும் மனதில் தோன்றும். அதுமட்டுமின்றி விசேஷ நாட்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கடவுள்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

வெற்றிலை அலங்காரத்தில் அம்மன்
குறிப்பாக அம்மன் கோவிலில் பக்தர்கள் பரவச நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் சற்று வித்தியாசமான அலங்காரங்கள் செய்யப்படும். அந்த வகையில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருச்செங்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

வெற்றிலை அலங்காரத்தில் அம்மன்
இதில், தேரடி தெருவில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், மஞ்சள், பன்னீர், இளநீர் போன்ற அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சன்னதி முழுவதும் வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

வெற்றிலை அலங்காரத்தில் அம்மன்
இங்கு சாமி உருவச் சிலை முதல் சன்னதி முழுவதும் வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டு இருந்ததால் அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
செய்தியாளர்: மதன், நாமக்கல்.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.