Home /namakkal /

காவிரி ஆற்றின் கரையோரத்தில் ஒதுங்கிய முதலைக் குட்டி - நாமக்கலில் பரபரப்பு

காவிரி ஆற்றின் கரையோரத்தில் ஒதுங்கிய முதலைக் குட்டி - நாமக்கலில் பரபரப்பு

பிடிபட்ட முதலைக் குட்டி

பிடிபட்ட முதலைக் குட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் கரையோரத்தில் முதலைக்குட்டி ஒன்று சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை நிலவியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pallipalayam, India
    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் கரையோரத்தில் முதலைக்குட்டி ஒன்று சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை நிலவியது.

    கர்நாடகா மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணை முழுமையாக நிரம்பியதால் அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கன கனஅடி தண்ணீர் வரையில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

    இதனிடையே பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் கரையோர பகுதியான ஆவத்திபாளையம் படித்துறையில் சிறிய குட்டி முதலை ஒன்றுகரை ஒதுங்கியது. முட்டையிலிருந்து பொறித்து ஒரு வாரங்களே இருந்த முதலை குட்டி, 150 கிராம் எடை அளவிற்கு மேல் இருந்துள்ளது.

    பிடிபட்ட முதலைக் குட்டி


    அப்போது ஆற்றுப் பகுதிக்கு சென்ற ஆவத்திபாளையத்தை சேர்ந்த டிரைவர் சரவணன் மற்றும் கிரிதரன் ஆகியோர் கரையில் வலையில் சிக்கி கொண்டிருந்த முதலைக்குட்டயை பிடிக்க முயன்றனர். அப்போது கல்லின் மேல் தண்ணீருக்குள் இருந்த குட்டி முதலை, இருவரையும் கண்டதும், காவிரி ஆற்றுக்குள் செல்ல முயன்றுள்ளது.

    இதனையடுத்து முதலை குட்டி பிடித்து தப்பித்து செல்லாதவாறு பாதுகாப்பாக தண்ணீர் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.
    மேலும் சரவணனின் கையை குட்டி முதலை பற்களால் கடித்தும் உள்ளது. இது குறித்து பள்ளிபாளையம் காவல்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனைக் தொடர்ந்து முதலைக்குட்டி நாமக்கல் வனக்காப்பாளரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. காவிரி ஆற்றில் முதலை குட்டி கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை நிலவியது.

    செய்தியாளர்: மதன், நாமக்கல்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி