முகப்பு /நாமக்கல் /

நாமக்கலில் ஒற்றைக்கல்லினால் ஆன 18 அடி பிரம்மாண்ட ஆஞ்சநேயர்...

நாமக்கலில் ஒற்றைக்கல்லினால் ஆன 18 அடி பிரம்மாண்ட ஆஞ்சநேயர்...

X
நாமக்கல்

நாமக்கல் அஞ்சநேயர்

Namakkal | நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது உலகப் புகழ்மிக்க 18 அடி கொண்ட ஆஞ்சநேயரின் திருக்கோயில்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் சன்னதி ஆஞ்சநேயருக்கு நேர் எதிரே உள்ளது. இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும். இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.

8 அடி உயரமுள்ள ஒற்றைக் கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. இது இந்தியாவிலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலையாக உள்ளது. இக்கோயில் விஷ்ணுவின் ஒரு அவதாரமான நரசிம்மர், அனுமன் மற்றும் லட்சுமி தேவிக்கு காட்சியளித்த இடமாக உள்ளது. இங்கு "ஸ்ரீ வைகானச" ஆகம முறை பின்பற்றப்படுகிறது.

1996-ஆம் ஆண்டுவாக்கில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு 1000-ஆவது ஆண்டு சம்ப்ரோஷண விழா நடந்தது. இக்கோயில் தமிழ்நாடு அரசு இந்து-அறநிலையத் துறையின்கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய நாமக்கல் மாவட்டம் அல்லாமல், பிற மாவட்டங்களிலும் பிற மாநிலத்திலும் பக்தர்கள் வருகை புரிவர். தினமும் இக்கோயிலில் மதிய உணவு 100 பேருக்கு அன்னதானமாக வழங்கப்பட்டு வருகிறது.

தேவதாசியாக்கப்பட இருந்த கொடூரம்... தப்பித்து காதலனை கரம் பிடித்த புதுக்கோட்டை பாட்டியின் காவியக்காதல்...

அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகளால் ஆன மாலை சாத்தப்படும். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு உகந்த நாள் என்பதால் பால், தயிர், திருமஞ்சனம், தேன் உள்ளிட்ட வாசனை திராவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டும்.

மேலும் விசேஷ நாட்களில் தங்க சவசம், வெள்ளி கசவம், முத்தங்கி அலங்காரமும் ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும். 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Namakkal