முகப்பு /நாமக்கல் /

நாமகிரிபேட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்.. வடம்பிடித்து பக்தர்கள் பரவசம்..

நாமகிரிபேட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்.. வடம்பிடித்து பக்தர்கள் பரவசம்..

X
நாமகிரிபேட்டை

நாமகிரிபேட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

Namakiripet Mariamman Temple : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட விழா கடந்த ஏப்ரல் 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட விழா ஏப்ரல், 25 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து தினமும் ஒவ்வொரு சமூகத்தாரும் சார்பில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. மண்டகப்படி செய்து அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் மாரியம்மன் ஊர்வலம், வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது.

நாமகிரிபேட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

இந்நிலையில், முக்கிய நிகழ்வான மாரியம்மன் கோவில் சித்திரை தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரானது மாரியம்மன் ஆலயத்திலிருந்து தொடங்கி அரியாங்கவுண்டம்பட்டி சாலை, கடைவீதி, ஆத்தூர் சாலை உள்ளிட்ட வழியாக சென்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து அம்மன் அருளைப் பெற்று சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Namakkal