முகப்பு /நாமக்கல் /

47 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த பள்ளி தோழிகள்.. நாமக்கல் அரசு பள்ளி 75 பேட்ச் மாணவிகளின் கெட் டூ கெதர்..

47 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த பள்ளி தோழிகள்.. நாமக்கல் அரசு பள்ளி 75 பேட்ச் மாணவிகளின் கெட் டூ கெதர்..

47 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த பள்ளி தோழிகள்

47 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த பள்ளி தோழிகள்

Namakkal News | நாமக்கல் நகரில் மோகனூர் சாலையில் 100 ஆண்டுகளை கடந்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் நகரில் மோகனூர் சாலையில் 100 ஆண்டுகளை கடந்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 1975-76ம் ஆண்டு பிளஸ் 1 படித்த மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அந்த காலகட்டத்தில் பயின்ற முன்னாள் மாணவிகள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் தாங்கள் பள்ளியில் படித்தபோது நடைபெற்ற சம்பவங்களை பகிர்ந்துகொண்டனர்.

மேலும் தங்களது திருமண நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்கள் குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை காண்பித்து தங்களது மகிழ்ச்சியை அவர்கள் பரிமாறிக்கொண்டனர். பின்னர் அவர்கள்  அனைவரும் ஒன்று சேர்ந்து குழுப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மாணவிகள் 47 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒன்று சேர்ந்து பள்ளியில் படித்தபோது நடைபெற்ற பழைய காலத்து அனுபவங்களை பகிர்ந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

First published:

Tags: Local News, Namakkal