முகப்பு /நாமக்கல் /

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க நாமக்கல் போக்குவரத்து போலீசாருக்கு இனி தினமும் பழரசம்!

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க நாமக்கல் போக்குவரத்து போலீசாருக்கு இனி தினமும் பழரசம்!

X
போலீசாருக்கு

போலீசாருக்கு பழரசம்

Namakkal News | கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நாமக்கல்லில் போலீசாருக்கு பழரசம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சாலைப் போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு குளிர்பானங்கள், பழரசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் போக்குவரத்துப் பிரிவில் முக்கிய சாலைச் சந்திப்புகள், சிக்னல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு பழரசம் வழங்கப்பட்டது.

ராசிபுரம் போக்குவரத்துக் காவல் பிரிவு ஆய்வாளர் என்.வெங்கடாஜலம், உதவி ஆய்வாளர் கே.நடராஜன் ஆகியோர் பேக்குவரத்துப் பிரிவு சிறப்பு ஆய்வாளர்கள் குமாரசாமி, முத்துசாமி, போக்குவரத்து தலைமைக் காவலர்கள் கவிதா, பிரபாவதி, சுகன்யா, காவலர்கள் சத்யா,ஷாஜகான், சந்தானம், சசிகுமார் ஆகியோருக்கு பழரசம் கொடுத்து இதனை துவக்கி வைத்தனர்.

அரசின் உத்தரவு படி காவலர்களுக்கு கோடைகாலம் முழுவதும் நாள்தோறும் பழரசம் வழங்கப்படும் என காவல் ஆய்வாளர் வெங்கடாஜலம் தெரிவித்தார்.

First published:

Tags: Healthy juice, Local News, Namakkal, Traffic Police