முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் டெண்டர் பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடிய மர்ம நபர்கள்..

நாமக்கல்லில் டெண்டர் பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடிய மர்ம நபர்கள்..

நாமக்கல்லில் டெண்டர் பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடிய மர்ம நபர்கள்

நாமக்கல்லில் டெண்டர் பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடிய மர்ம நபர்கள்

Namakkal Today News : நாமக்கல்லில் டெண்டர் பெட்டியை தூக்கிக்கொண்டு மர்ம நபர்கள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மற்றும் பரமத்தி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொருட்களை லாரி மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டிற்கான டெண்டர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. அதன்படி 2023 -‌2024ம் ஆண்டிற்கான டெண்டர் நடைபெறுவதாக கடந்த மாதம் 20ம் தேதி அறிவிப்பு வெளியானது.

அதில் நேற்று டெண்டர் நடைபெறுவதாகவும் அது நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில் நடைபெறும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு துவங்கி நேற்று காலை 10.30 மணியளவில் டெண்டரில் பங்கேற்கலாம் எனவும் அதன்பின் குறைந்த ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டவர்களுக்கு டெண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று காலை 10.30 மணி வரை டெண்டர் விண்ணப்பத்தை போட பெட்டி வைக்கப்படாமல் இருந்தது குறித்து அதிகாரிகளிடம் டெண்டர் போட வந்தார்கள் கேட்டுள்ளனர். அதற்கு நாமக்கல், பரமத்தி பகுதிகளுக்கு தனித்தனியாக பெட்டிகள் தயார் செய்து கொண்டிருப்பதாக கூறிய அதிகாரிகள் சிறிது நேரத்தில் டெண்டருக்கான பெட்டியை வைத்தனர்.

அப்போது பெட்டியில் நாமக்கல் பகுதிக்கான விண்ணப்பத்தை போடலாம் என காத்திருந்த சிலர் அலுவலகத்தில் இருந்த நாமக்கல் பகுதிக்கான பெட்டியில் தங்களது விண்ணப்பத்தை போட்டு விட்டு அதில் வேறு யாரையும் போட விடாமல் டெண்டர் பெட்டியை தூக்கி கொண்டு சங்க அலுவலகத்தை விட்டு அவசர அவசரமாக வெளியே சென்று விட்டனர். இதனால் மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்கள் பெட்டியை தூக்கிச்சென்றபோது அங்கிருந்த அதிகாரிகள் அவர்களை தடுக்கவில்லை எனவும், டெண்டரில் பங்கேற்க ஒரு சிலரை மட்டுமே அனுமதித்தாக அங்கிருந்த சிலர் குற்றம் சாட்டி தர்ணாவில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தகவல் அறிந்து கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்த நாமக்கல் ஆய்வாளர் சங்கரபாண்டியன் தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் கேட்டபோது டெண்டர் பெட்டியை தூக்கி சென்றவர்கள் யாரேன்று தெரியாது எனவும், அதனால் டெண்டரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் டெண்டருக்கான பெட்டியை தூக்கி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடமும் நாமக்கல் காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர்.

First published:

Tags: Local News, Namakkal