ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டும் முத்தங்கியின் சிறப்புகள் என்ன தெரியுமா..?

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டும் முத்தங்கியின் சிறப்புகள் என்ன தெரியுமா..?

நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் ஆஞ்சநேயர்

Namakkal | இந்த, 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. இந்தியாவிலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை இதுவாகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Namakkal | Namakkal | Tamil Nadu

நாமக்கல்லில் உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இது, நகரின் மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இந்த கோவில் தென்னிந்திய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும்.

இங்கிருக்கும் ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த, 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. மேலும் இது இந்தியாவிலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை என்று போற்றப்படுகிறது. இந்தக் கோவில் விஷ்ணுவின் ஒரு அவதாரமான நரசிம்மர், அனுமன் மற்றும் லட்சுமி தேவிக்கு காட்சியளித்த இடமாக கருதப்படுகிறது.

இங்கே நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்கள், ஆஞ்சநேயர் சந்நிதிக்கு வருகைதந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கே நாள்தோறும் ஆஞ்சநேயருக்கு காலை காலை 8 மணிக்கு வடைமாலை அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து, மஞ்சள், குங்குமம், திருமஞ்சள், பால், தயிர், வெண்ணெய், தேன், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதனைத் தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம், வெள்ளிக்கவசம், வெற்றிலை அலங்காரம் போன்ற பல்வேறு அலங்காரங்கள் மதிய வேளையில் நடைபெறும். இந்த ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்திலும், தை மாதத்திலும் வெண்ணெய்க்காப்பு அலங்காரம் வெகு சிறப்பாக நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வணங்குவர்.

ALSO READ | கேள்விக்குறியான சிறுமியின் கல்வி - தவிக்கும் மாற்றுத்திறனாளி குடும்பம்

இந்நிலையில், புரட்டாசி மாத மூல நட்சத்திரத்தை பிரசித்தி பெற்ற இந்த ஆஞ்சநேயருக்குப் புதிய முத்தங்கி அலங்காரம் சாற்றுப்படி செய்யப்பட்டது. இந்த முத்தங்கியை திருப்பூர் பக்தர் ஒருவர் காணிக்கையாக கொடுத்துள்ளார். இந்த முத்தங்கி, மதுரையைச் சேர்ந்த திருமுருகன் என்பவரால் ஒரு மாதகாலம் மிகுந்த கலை நுணுக்கத்துடனும், விலை உயர்ந்த முத்துக்கள் கோர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த முத்தங்கியைக் கொண்டு ஆஞ்சநேயருக்குச் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்வாறு முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் அனுமனைத் தரிசனம் செய்தால், இழந்த பொருட்களும், வாழ்க்கையில் நிம்மதியும் ராஜயோகமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Published by:Anupriyam K
First published:

Tags: Namakkal, Temple