முகப்பு /நாமக்கல் /

10 வருடங்களாக கோடை காலத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கிவரும் ஊர்மக்கள்

10 வருடங்களாக கோடை காலத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கிவரும் ஊர்மக்கள்

X
நாமக்கல்

நாமக்கல்

Namakkal News | நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் டோல்கேட் பகுதியில் உள்ளது குஞ்சாம்பாளையம் மற்றும் தட்டான் குட்டை கிராமங்கள்.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லை சேர்ந்த  கிராம மக்கள் கடந்த 10 வருடங்களாக கோடை காலங்களில் இலவசமாக மக்களுக்கு நீர் மோர் வழங்கி வருகின்றனர்.

நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் டோல்கேட் பகுதியில் உள்ளது குஞ்சாம்பாளையம் மற்றும் தட்டான் குட்டை கிராமங்கள். இந்த டோல்கேட் அருகே நீர் மோர் பந்தல் அமைத்து, இவ்விரு கிராம மக்களும் கோடை காலங்களில் ஆண்டுதோறும் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கி வருகின்றனர். 

இலவசமாக வழங்கப்படும் நீர் மோர்

இவ்வழியாக செல்லும் கார், லாரி, பேருந்து ஓட்டுனர்கள்,  விவசாயிகள், பெண்கள், குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைவரும் கோடை வெயிலை சமாளிக்க இந்த இலவச நீர் மோர் பந்தலில் தயக்கமின்றி இலவசமாக வழங்கப்படும் நீர்மோரினை வாங்கி பருகி தாகம் தீர்த்து செல்வதாக கூறுகின்றனர் இந்த கிராம மக்கள், கடந்த 10 ஆண்டுகளாக இதனை ஒரு சேவையாகவே செய்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Namakkal