முகப்பு /நாமக்கல் /

6ம் தேதி வரை பெட்ரோல் இலவசம்.. நாமக்கல்லில் படையெடுக்கும் வாகன ஓட்டிகள்..

6ம் தேதி வரை பெட்ரோல் இலவசம்.. நாமக்கல்லில் படையெடுக்கும் வாகன ஓட்டிகள்..

X
பெட்ரோல்

பெட்ரோல் பங்க்கில் குவிந்த வாகன ஓட்டிகள்

Namakkal News : நாமக்கல்லில் வரும் 6ம் தேதி வரை இலவச பெட்ரோல் என ஒரு அறிவிப்பை தொடர்ந்து ஏராளமானோர் பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் புதிதாக ஒரு சலுகையை வெளியிட்டுள்ளது. அதாவது வாகன ஓட்டிகள் தங்களது மொபைல் எண்ணை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு ஒருமுறை கடவு எண் வரும். அந்த கடவு எண்ணை மீண்டும் பதிவிட்டால் வாகனத்திற்கு 50 ரூபாய் பெட்ரோல் இலவசமாக பெறலாம். இந்த சலுகை இன்று முதல் 6-ம் தேதி வரை உள்ளது. அந்தவகையில், நாமக்கல் அடுத்துள்ள முத்துகாப்பட்டியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் உள்ளது.

இந்த பங்கில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சலுகை குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரியவந்ததால் ஏராளமானோர் பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்து வருகின்றனர். அதன்படி பெட்ரோல் பங்கில் மொபைல் எண்ணை பதிவு செய்துவிட்டு இலவசமாக 50 ரூபாய் பெட்ரோலை வாகனங்களுக்கு நிரப்பி செல்கின்றனர்.

மொபைல் எண்ணை பதிவு செய்து விட்டு இலவசமாக 50 ரூபாய் பெட்ரோலை நிரப்பி கொள்ளலாம் எனவும் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் ஒரு முறை பதிவு செய்து விட்டு பணம் செலுத்தி பெட்ரோல் நிரப்பினால் அதற்கான பாயிண்டுகள் ஏறும் எனவும், இந்த சலுகை தமிழகம் முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து பெட்ரோல் பங்குகளில் உள்ளதாகவும் இந்த சலுகை பெட்ரோலுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Namakkal