ஹோம் /நாமக்கல் /

யானை, குதிரைகளுடன் 3,000 பக்தர்கள் 10 கி.மீ தீர்த்தக்குடம் ஊர்வலம்.. நாமக்கல் ஆரியூர் முத்துசாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்..

யானை, குதிரைகளுடன் 3,000 பக்தர்கள் 10 கி.மீ தீர்த்தக்குடம் ஊர்வலம்.. நாமக்கல் ஆரியூர் முத்துசாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்..

X
நாமக்கல்

நாமக்கல் கோவில் விழா

Namakkal | நாமக்கல் அருகே கோவில் கும்பாபிேஷக விழாவை ஒட்டி 10 கி.மீ தூரம் தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ஆரியூரில், பிரசித்தி பெற்ற முத்துசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் முத்துசாமி, மகா கணபதி, சப்த கன்னிமார், கருப்பண்ண சுவாமி ஆகிய தெய்வங்கள் எழுந்தருளி உள்ளன. இக்கோவிலில், புணரமைப்பு பணிகள் முடிவடைந்து வருகின்ற 26-ம் தேதி கும்பாபிேஷகம் கோலாகலமாக நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, கணபதி, மகாலட்சுமி மற்றும் நவக்கிரக ஹோமம், தீபாராதனையும் நடந்தது.

அதனை தொடர்ந்து, மோகனூர் காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடினர். அங்கிருந்து, 3,000க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு, யானை, குதிரை, பசு உள்ளிட்டவையுடன் பின் தொடர, 10 கி.மீ துாரம் நடந்து சென்று கோவிலை அடைந்தனர். தீர்த்த குட ஊர்வலத்தில் கேரள செண்டை மேளம், மேளதாளத்துடன் ஒயிலாட்டத்துடன் சுவாமி ஊர்வலமும் நடைபெற்றது.

நாமக்கல்லில் மணமக்களுக்கு தலா 2 கிராம் தங்கம் நாணயங்களை வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்

இதனை தொடர்ந்து நாளை யாகசாலை பிரவேசம், இரண்டாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் 26-ம் தேதி காலை 8 மணிக்கு சப்த கன்னிமார், முத்துசாமி, கருப்பண்ண சுவாமி ஆலய கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Namakkal