ஹோம் /நாமக்கல் /

திருச்செங்கோட்டில் ஒரே நாளில் வெறி நாய் கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!

திருச்செங்கோட்டில் ஒரே நாளில் வெறி நாய் கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!

X
தெருநாய்

தெருநாய் கடித்து காயம்

Tiruchengode dogs | நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் பொதுமக்களை கடித்ததில் ஒரே நாளில் 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchengode | Namakkal

திருச்செங்கோட்டில் ஒரே நாளில் 20க்கும் மேற்பட்டோரை வெறிநாய்கள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகம் இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் நாய்கடிக்கு ஆளாகி வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த நகராட்சி நி்ர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் இன்று மட்டும் ஒரேநாளில் மட்டும் திருச்செங்கோடுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த 20க்கும்‌ மேற்பட்டோரை வெறிநாய்கள் கடித்தது. இதில் பலருக்கு முகம், கைகள் மற்றும் கால்களில் வெறிநாய்கள் கடித்து குதறியது. இதனால் 20 பேரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஒரு சிலருக்கு காயம் அதிகளவில் ஏற்பட்டுள்ளதால் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பட்டுள்ளனர்.‌

திருச்செங்கோடு மட்டுமின்றி நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றி திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் 50க்கும் மேற்பட்ட நாய்கள் சாலையின் குறுக்கே செல்லுவதால் தினசரி விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளையும் நாய்கள் கடித்த வண்ணம் உள்ளது.

நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

First published:

Tags: Dog, Local News, Namakkal