ஹோம் /நாமக்கல் /

நாமக்கல்லில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் விழிப்புணர்வு பேரணி

Namakkal rally | நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 13-வது ஆண்டாக நாமக்கல்லில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட வேண்டும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்.

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பொதுமக்கள்

இந்த பேரணியானது தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி மோகனூர் சாலை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தது.

First published:

Tags: Local News, Namakkal