முகப்பு /நாமக்கல் /

வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு..ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு..ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

Namakkal | நாமக்கல் மாவட்டத்திலேயே இந்த பகுதிகளில் தான் அதிகளவில் வெங்காயம் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் காய்கறி, மக்காச்சோளம் உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal | Namakkal

நாமக்கல் அடுத்த வளையப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகம் முன் முற்றுகையிட்டு கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

நாமக்கல் அடுத்த வளையப்பட்டி பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் சிப்காட் அமைய இருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்துவதற்காக வளையப்பட்டி, பரளி,அரூர், புதுப்பட்டி, லத்துவாடி, உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்திலேயே இந்த பகுதிகளில் தான் அதிகளவில் வெங்காயம் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் காய்கறி, மக்காச் சோளம் உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது.

நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய நிலங்களும் விவசாயமும் பாதிக்கப்படும். பொது மக்களின் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த விசயத்தில் தலையிட்டு சப்காட் அமைப்பதை கைவிட வேண்டும். இல்லையெனில் விவசாயிகல் ஒன்றினைந்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுப்படுவோம் என்றனர்.

First published:

Tags: Farmers, Local News, Namakkal