நாமக்கல் மாவட்டம் மோடமங்கலத்தில் உள்ள விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா மேளதாளத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இதில் கோபுர தரிசனத்தை காண திரளான மக்கள் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் மோடமங்கலத்தில் புதிதாக சுப்பிரமணியர் கோயில் கட்டப்பட்டுள்ளது. சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டு ஆலய நிர்வாகிகள் குழுவினர் மற்றும் ஊர்மக்கள் என ஒன்றாக சேர்ந்து விமான கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தினர்.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கோபுர சிற்பங்களுக்கு கண் திறப்பு செய்யப்பட்டு அதன் பூஜைகள் செய்தனர். அதன்பின் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்த குடம் எடுத்தல், முளைப்பாரி அழைத்தல், சிறப்பு பூஜைகள் என நடந்தது. அதனைத் தொடர்ந்து முதல் கால யாக பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள், மூன்றாம் கால பூஜைகள், நான்காம் கால யாக பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமங்கள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.
திருச்செங்கோட்டில் இருந்து மோடமங்கலம் செல்லும் பாதையை காட்டும் கூகுள் மேப்...
அதன்பின் யாக சாலை பூஜைகள் நடைப்பெற்று மங்கள இசை முழங்க சிதம்பரம் குருசாமிகள் மடாதிபதி சிவஶ்ரீ சிதம்பரம் சிவாச்சாரியார் தலைமையில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் உள்ளுர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுரம் மற்றும் சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். விழாவில் பங்கேற்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.