முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

நாமக்கல்லில் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Minister Udhayanithi Stalin | நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட அழகுநகரில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் தமிழக அரசின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் அழகுநகரில் உள்ள நகரவை துவக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது அமைச்சர் உதயநிதி குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநீற்றலை தவிர்க்கும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் நகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் 2ம் கட்ட திட்டமானது மார்ச் 1ம் தேதி துவக்கப்பட்டது.

மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இதில் மாவட்டம் முழுவதும் உள்ள மொத்தம் 2,594 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட அழகுநகரில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் தமிழக அரசின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது உணவு எவ்வாறு உள்ளது என்பது குறித்து குழந்தைகளுடன் கேட்டறிந்தார். பின்னர் குழந்தைகளுடன் அமர்த்து காலை உணவை சாப்பிட்டார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி சிங், எம்.எல்.ஏ ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

First published:

Tags: DMK, Local News, Namakkal, Udhayanidhi Stalin