நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு வணிகர்களுடன் கலந்துரையாடினார். இதில் வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைப்பது, மே 5ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் வணிகர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா, “மகளிருக்கு அநீதி, கொடுமைகள் நடந்து விடக்கூடாது, பல்வேறு சட்டங்களை அரசு இயற்றி இருக்கிறது. பல்வேறு ரவுடிகளால் எந்த இடையூறு ஏற்பட்டாலும், ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் பேரமைப்பு வலியுறுத்துகிறது.
கடைகளின் பெயர் பலகைகளை தமிழாக்கம் செய்ய வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வணிகர் சங்க பேரமைப்பு மனதார ஏற்றுக்கொண்டு கால அவகாசம் பெற்று கடைகளின் பெயர் பலகையை தமிழாக்கம் படுத்தப்படும் என உறுதி அளித்துள்ளோம். அரசுத்துறை அலுவலங்களின் கடிதங்கள் ஆங்கிலத்தில் வருகிறது. இதனை முழுமையாக தமிழாக்கம் செய்ய வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
வடமாநில தொழிலாளர் இதுவரை 27 ஆயிரம் பேர் ஹோலி பண்டிகைக்கு சென்றுள்ளனர். முதலில் வட மாநில தொழிலாளர்கள் அச்சப்பட்டு வெளியேறினர். அரசும், வணிகர் சங்க பேரமைப்பும் நேரடியாக வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று தைரியப்படுத்தி ஆறுதல் சொன்ன பிறகு வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது கணிசமான குறைந்து சீராக உள்ளன. சில இடங்களில் புல்லுருவிகள் விஷமத்தனத்தை செய்யக்கூடாது என தெளிவாக வணிகர் சங்க பேரமைப்பு தெளிவாக இருப்பதாகவும் இதுகுறித்து முதலமைச்சர், டி.ஜிபியிடம் எடுத்து கூறி உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal