Home /namakkal /

நாமக்கலில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் - நேரம், இடங்கள் அறிவிப்பு

நாமக்கலில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் - நேரம், இடங்கள் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக் கிழமை)  கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில் அது குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வரும் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2ஆம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. வரும் 30ஆம் தேதி வரை மட்டுமே இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் நாளை 35-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் என மொத்தம் 1,263 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி