நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் மருத்துவ கல்லூரி செயல்பட துவங்கியது.
இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவராத நிலையில் உள்ளதாகவும், இதனால் நாமக்கல் மாவட்ட மக்கள் அவசர சிகிச்சைக்கும், உயர்தர சிகிச்சைக்க சேலம், கரூர், கோவை என அருகில் உள்ள மாவட்டங்களுக்கு செல்லும் நிலை உள்ளதாகவும், சில நேரங்களில் வெளியூர் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பல உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டு மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் தண்ணீர் வசதி இல்லாததால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறப்பதில் தாமதம் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. தொடரும் காலதாமதத்தால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட துவங்கும்போது பொதுமக்களுக்கு கிடைக்கப்பெறும் மருத்துவ பயன்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என மருத்துவமனை பணியாளர்கள் கிடைக்கப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு தினசரி கிடைக்க வேண்டிய உயர் சிகிச்சை, உடனுக்குடன் கிடைக்க வேண்டிய உயிர் காக்கும் சிகிச்சையும் கிடைப்பது தாமதமாகி வருகிறது.
தமிழக அரசு, நாமக்கல் மாவட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைத்திடவும், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு மக்கள் சென்று சிகிச்சை பெற சிரமப்படுவதை தவிர்க்கவும், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க : கம்பம் டூ தென்கொரியா.. தேனி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் காவலர்..
இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி, பெருமாள், அசோகன், ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேலுசாமி, தங்கமணி, தமிழ்மணி, ஜெயமணி, சுரேஷ், கண்ணன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், செல்வராசு, சின்னசாமி, ராயப்பன், ரவி வெங்கடாசலம், தேவராஜ் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal