Home /namakkal /

நாமக்கல் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா

நாமக்கல் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா

மாரியம்மன்

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா- திரளான பக்தர்கள் பங்கேற்பு

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கோபுர சிற்பங்களுக்கு கண் திறப்பு செய்யப்பட்டு அதன் கிராமசாந்தி பூஜை நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டம் தெற்குப் பாளையம் என்ற ஊரில் காலம் காலமாக முன்னோர்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்த மகா கணபதி மற்றும் மகா மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

    தெற்குப்பாளையம் என்ற ஊரில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் இங்குள்ள உள்ளவர்களுக்கு காவல் தெய்வமாகவும் இருக்கிறது. பழைமை வாய்ந்த இக்கோயில் புதிதாக புனரமைக்கப்பட்டு, கோயில்களில் பழுது கள் சரிபார்க்கப்பட்டு, கோயில் முழுவதும் புதிய வண்ணப் பூச்சுகள் பூசப்பட்டு புதிதாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் மந்தினச் சித்திர மணி மண்டபமாக மாற்றி புதுப்பிக்கப்பட்டுள்ள கோயிலுக்கு, கோயில் சேர்ந்தவர்கள் மற்றும் ஊர்மக்கள் என ஒன்றாக சேர்ந்து மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

    இதில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கோபுர சிற்பங்களுக்கு கண் திறப்பு செய்யப்பட்டு அதன் கிராமசாந்தி பூஜை நடைபெற்றது. அதன்பின் காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தம் குடம் எடுத்தல், முளைப்பாரி அழைத்தல், விசேஷ பூஜைகள் என நடந்தது. அதனைத் தொடர்ந்து முதல் கால யாக பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள், மூன்றாம் கால பூஜைகள், நான்காம் கால யாக பூஜைகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.

    அதன்பின் யாக சாலை பூஜைகள் நடைப்பெற்று மங்கள இசை முழங்க இரண்டு கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் உள்ளுர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுரம் மற்றும் சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். விழாவில் பங்கேற்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி