Home /namakkal /

Namakkal : சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி திருச்செங்கோட்டில் 1,000 பேர் பங்கேற்ற மாரத்தான்..!

Namakkal : சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி திருச்செங்கோட்டில் 1,000 பேர் பங்கேற்ற மாரத்தான்..!

நாமக்கல்

நாமக்கல் - மாரத்தான் போட்டி

Namakkal District : திருச்செங்கோட்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றிய திமுக மற்றும் உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இந்த மாரத்தான் போட்டிக்காக, திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து சித்தாளந்தூர் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு காலையில் போட்டி தொடங்கப்பட்டது.

    இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள பெங்களூரு, நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, சேலம், கோவை என பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.

    மாரத்தான் போட்டியில் 5 கிலோமீட்டர் பெண்கள் பிரிவில் பங்கேற்று வித்தியா என்ற பெண் முதலாவதாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து ஆண்கள் பிரிவில் 10 கிலோமீட்டர் பிரிவில் பெங்களூரை சேர்ந்த நஞ்சுண்டா என்ற இளைஞர் முதலிடம் பிடித்தார்.

    முதல் மூன்று இடங்கள் பிடித்த வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகையும், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal, Sports

    அடுத்த செய்தி