முகப்பு /நாமக்கல் /

சிறந்த முறையில் செயல்படும் மகளிர் குழுக்களுக்கு மணிமேகலை விருது 

சிறந்த முறையில் செயல்படும் மகளிர் குழுக்களுக்கு மணிமேகலை விருது 

நாமக்கல் மாவட்ட கலெக்டர்

நாமக்கல் மாவட்ட கலெக்டர்

Namakkal News | சிறந்த முறையில் செயல்பட்டு வரும், மகளிர் குழுக்கள் மாநில அளவிலான மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Namakkal, India

சிறந்த முறையில் செயல்பட்டு வரும், மகளிர் குழுக்கள் மாநில அளவிலான மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, “மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சிறந்த சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்காக தமிழக அரசு ரூ. 2.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மணிமேகலை விருது தேர்வுக்கான தகுதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சிறந்த குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு மணிமேகலை விருதுக்கு பரிந்துரை செய்யப்படும். விருதுக்கு தேர்வு செய்யப்படும். சுயஉதவிக்குழுக்கள் அ மற்றும் ஆ தரமதிப்பீடு உடையதாக இருக்கவேண்டும். சுயஉதவிக்குழுக்கள் துவங்கப்பட்டு குறைந்த பட்சம் 4 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். வங்கி கடன் குறைந்தபட்சம் 3 முறை பெற்று முறையாக திருப்பி செலுத்தியிருக்கவேண்டும். குறைந்த பட்சம் 2 அலுவலக நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்திருக்கவேண்டும்.

இதையும் படிங்க : மதுரை சித்திரை திருவிழா 2023| கீழமாசி வீதியில் நடப்பட்டது முகூர்த்தக்கால்!

சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்காக விருது பெற, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அ மற்றும் ஆ தரமதிப்பீடு பெற்றிருக்கவேண்டும். சிறந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கம் விருது பெற விண்ணப்பிக்க கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அ மற்றும் ஆ தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும்.

சிறந்த வட்டார அளவிலான கூட்டமைப்பு விருது பெற சிறந்த வட்டார அளவிலான கூட்டமைப்பு அ மற்றும் ஆ தரமதிப்பீடு பெற்றிருக்கவேண்டும். வட்டார அளவிலான கூட்டமைப்பு துவங்கப்பட்டு குறைந்த பட்சம் 1 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். அந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் இணைந்திருக்க வேண்டும்.

கடந்த ஓராண்டில் வட்டார அளவிலான கூட்டமைப்பில் குறைந்தது 10 கூட்டங்கள் நடந்திருக்க வேண்டும். சிறந்த பகுதி அளவிலான கூட்டமைப்பு விருது பெற அ மற்றும் ஆ தரமதிப்பீடு பெற்றிருக்கவேண்டும்.நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் அனைத்து சுயஉதவிக்குழுக்களும் பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைந்திருக்கவேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளில் பகுதி அளவிலான கூட்டமைப்பில் குறைந்த பட்சம் 20 கூட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும். சிறந்த நகர அளவிலான கூட்டமைப்பிற்கான விருது பெற நகர அளவிலான கூட்டமைப்பு துவங்கப்பட்டு குறைந்த பட்சம் 1 வருடம் முடிந்திருக்கவேண்டும். நகர அளவிலான கூட்டமைப்பு கடந்த 1 ஆண்டில் குறைந்தபட்சம் 10 கூட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    2022-2023 ஆம் ஆண்டிற்கு மணிமேகலை விருதிற்கு தகுதியான குழுக்களிடம் இருந்து, வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியான குழுவினர் வருகிற ஏப்.25ம் தேதிக்குள், அதற்கான விண்ணப்பங்களை வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Namakkal