Home /namakkal /

Namakkal | சக்தி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா - பக்தர்கள் பரவசம்

Namakkal | சக்தி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா - பக்தர்கள் பரவசம்

நாமக்கல் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

நாமக்கல் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

Namakkal | நாமக்கல் மாவட்டம் இறைமங்கலம் என்ற ஊரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சக்தி விநாயகர், மஹா சக்தி மாரியம்மன் திருக்கோயில்கள் குடமுழுக்கு விழா பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் மேளதாளத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டம் இறைமங்கலம் என்ற ஊரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சக்தி விநாயகர், மஹா சக்தி மாரியம்மன் திருக்கோயில்கள் குடமுழுக்கு விழா பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் மேளதாளத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டம் இறையமங்கலம் அடுத்துள்ள நைனாம்பாளையம் என்ற ஊரில் எழுந்தருளி உள்ள சக்தி மாரியம்மன் கோயில் முழுவதும் வண்ணப் பூச்சுகள் பூசப்பட்டு அம்மனுக்கு என்று பெரிய கோபுரத்துடன் புதிதாக இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

    கோயில் வேலைகள் முடிந்த பிறகு கோபுர சிற்பங்களுக்கு கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன்பின் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தம் குடம் எடுத்தல், முளைப்பாரி அழைத்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

    நாமக்கல் கோவில் குடமுழுக்கு


    அதனைத் தொடர்ந்து குடமுழுக்கு விழாவிற்கு முந்தைய இரவு முழுவதும் முதல் கால யாக பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள், மூன்றாம் கால பூஜைகள், நான்காம் கால யாக பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடந்து.

    அதன்பின் யாக சாலை பூஜைகள் முடிவுற்ற பிறகு மங்கள இசை முழங்க ஶ்ரீலஶ்ரீ சாம்பசிவ ரீஷீஸ்வரர் சுவாமிகள் முன்னிலையில் அம்மன் மற்றும் விநாயகர் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் உள்ளுர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுரம் புனித நீர் ஊற்றுதல் மற்றும் சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி