நாமக்கல் என்ற இந்த ஊரின் பெயரை சொன்னாலே தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநில மக்களுக்கும், குறிப்பாக போக்குவரத்து துறையில் இருப்பவர்களுக்கும் சட்டென நினைவுக்கு வருவது முட்டை உற்பத்தியும், லாரி பாடி பில்டிங் தொழிலும் தான்.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்துடன் நாமக்கல் இருந்தது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1997ம் ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின், நாமக்கல் என்ற பெயர் சர்வதேச அளவில் பிரபலமாகி விட்டது என்றே கூறலாம். உழைப்பில் சிறந்தவர்களான இப்பகுதி மக்கள், தாங்கள் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு தொழிலையும் அதனை மற்றவர்கள் திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என போராடுபவர்கள் நாமக்கல் மாவட்டதை சேர்ந்தவர்கள்.
அந்த வகையில், முட்டை உற்பத்தியை போன்றே லாரி பாடி பில்டிங் தொழிலானது நாமக்கல் மாவட்டத்தில் அபரிமித வளர்ச்சியைப் பெற்று விளங்குகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களில் லாரி கட்டுமானத் தொழில் பெரிதளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஏராளமான லாரி பாடி கட்டும் பட்டறைகள் இயங்கி வருகின்றன.
பிற மாநிலங்களில் லாரி பாடி கட்டுமானம் செய்தாலும் நேர்த்தியாகவும், தரமான முறையிலும் லாரி பாடி கட்டுவதற்கு நாமக்கல் பெயர் போனது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் லாரிகளை பாடி கட்டுவதற்காக நாமக்கல்லுக்கு கொண்டு வருகின்றனர்.
டாரஸ், எல்.பி.ஜி டேங்கர், டிரெய்லர், ரிக் வாகனங்கள், மணல் லாரிகள் என பல்வேறு சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்கு பாடி கட்டுவதற்கு நாமக்கல்லை தேடி வருகின்றனர். இந்த தொழிலை நம்பி இங்கு பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளும், அவர்களின் குடும்பத்தினரும் உள்ளனர்.
தற்போதைய சூழலில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் லாரி பாடி பில்டிங் தொழில் இயங்கி வருகிறது. இருந்தாலும்கூட வடமாநிலங்களில் இருந்து லாரிகளுக்கு பாடி கட்ட இன்றளவும் நாமக்கல்லுக்கு லாரிகள் வந்த வண்ணமே உள்ளது.
நாமக்கல்லில் வந்து லாரிகளுக்கு பாடி கட்டினால் தரமாகவும் கன கச்சிதமாகவும் இருக்கும் என்ற நம்பகதன்மை இன்னும் வட மற்றும் தென் மாநில லாரி உரிமையாளர்கள் மனதில் அழியாமல் உள்ளது.
இந்த நம்பகத்தன்மையினை உருவாக்கியவர்கள் இந்த தொழிலாளர்கள் என்பதில் சந்தேகமில்லை.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal