முகப்பு /நாமக்கல் /

ராசிபுரத்தில் முளைப்பாரி, சீர்வரிசையுடன் வெகு விமரிசையாக நடந்த தர்மசம்வர்த்தினி அம்பாள் கைலாசநாதர் திருமணம்...

ராசிபுரத்தில் முளைப்பாரி, சீர்வரிசையுடன் வெகு விமரிசையாக நடந்த தர்மசம்வர்த்தினி அம்பாள் கைலாசநாதர் திருமணம்...

X
சிவ-

சிவ- பார்வதி திருமணம்

Namakkal News| இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு மகிழ்ந்தனர்.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் 23 ஆம் ஆண்டாகஸ்ரீ தர்மசம்வர்த்தனி அம்பாள் சமேத ஶ்ரீ கைலாசநாதருக்கு திருக்கல்யாணம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஸ்ரீ தர்மசம்வர்த்தனி அம்பாள் சமேத ஶ்ரீ கைலாசநாதர் எம்பெருமானுக்கும் 23ஆம் ஆண்டாக திருக்கல்யாணம் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்திற்கு முன்னதாக கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ராஜபக்கணபதி சன்னதியில் இருந்து சீர்வரிசை முளைப்பாரி ஆகியவற்றை பக்தர்கள் கொண்டு வந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் உள்ள கைலாசநாதர் அம்பாள் திருமண மண்டபத்தில் சீர்வரிசைகளை வைத்து பூஜை செய்தனர். பின்னர் ஸ்ரீ தர்மசம்வர்த்தனிக்கும் ஸ்ரீ கைலாசநாதர்க்கும் திருக்கல்யாணம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு மகிழ்ந்தனர்.

First published:

Tags: Local News, Namakkal