முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (மே 13) லோக் அதாலத்..

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (மே 13) லோக் அதாலத்..

மாதிரி படம்

மாதிரி படம்

Lok Adalat in Namakkal : நாமக்கல் மாவட்டத்தில் வரும் 13ம் தேதி (சனிக்கிழமை) தேசிய அளவிளான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 13ம் தேதி லோக் அதாலத் நடைபெற உள்ளது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு பற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பரமத்தி சார்பு நீதிமன்றம், சேந்தமங்கலம் கோர்ட் மற்றும் குமாரபாளையம் கோர்ட் ஆகிய இடங்களில், வருகிற 13ம் தேதி சனிக்கிழமை தேசிய அளவிளான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

கல்வி உதவித்தொகை பெற வாய்ப்பு ஏற்கணவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரசம் செய்து கொள்ளக் கூடிய சிவில் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்) விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள் போன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. மக்கள் நீதின்றம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமைமாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் யாருக்காவது கோர்ட்டுகளில், மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து, அவர்கள் மக்கள் நீதிமன்றத்தை அனுகினால் வழக்குகளுக்கு சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணப்படும் என்று மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குணசேகரன் தெரிவித்துள்ளார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Namakkal