Home /namakkal /

நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி..!!

நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி..!!

விசைத்தறி

விசைத்தறி

Namakkal District: நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், வெண்ணந்தூர் பகுதிகளில் விசைத்தறி தொழிலை‌ நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.

    தொடர்ந்து நூல் விலை ஏறிக்கொண்டு வருவதால் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் அதை  சார்ந்த  தொழிலாளிகள் வேலையிழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் இழக்கும் நிலை உருவாகி உள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், வெண்ணந்தூர் பகுதிகளில் விசைத்தறி தொழிலை‌ நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.மேலும் இங்கு உள்ளவர்களுக்கு விசைத்தறி உற்பத்தி முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.

    இதனிடையே விசைத்தறி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக இருக்கும் நூல், ஆடை தயாரிப்பில் இன்றியமையாததாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நூல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

    தற்போது இதனை சார்ந்து உள்ள தொழிலாளிகள் வேலையிழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் விசைத்தறி உரிமையாளர்களும் நூல் மற்றும் அதைச் சார்ந்த உற்பத்தி பொருட்களை வாங்க முடியாமல் இருப்பதால் அவர்களாலும் தொடர்ந்து உற்பத்தி தொடர முடியாமல் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதே நிலை நீடித்துக் கொண்ட சென்றால் விசைத்தறி உற்பத்தி மற்றும் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டு மிகவும் சிரமத்துக்கு உள்ளவார்கள்.

    இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்கள் கூறுகையில், சற்றும் எதிர்பார்காமல் நூல் விலை ஏறிக்கொண்டே போகிறது. இதனால் எங்களால் நூல்களை தொடர்ந்து வாங்கி உற்பத்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.இதே நிலை நீடித்தால் எங்களை சார்ந்து உள்ள தொழிலாளிகள் மற்றும் குடும்பங்கள் வேலையிழப்பு ஏற்பட்டு மிகவும் சிரமத்துக்கு உள்ளவார்கள்.

    நாமக்கல் மாவட்டத்தில் லட்சக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் இருக்கின்றனர். அதை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.நூல் விலை ஏறிக்கொண்டு சென்றால் அனைத்து குடும்பங்களும் உரிமையாளர்களும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

    மேலும் தற்போது உற்பத்தி செய்யப்படும் துண்டுகள் மற்றும் வேஷ்டி போன்றவைகளை ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கம் அடைந்து வருகிறது. இதனால் தொழிலாளிகளுக்கு சம்பளம் தர முடியாமல் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே விசைத்தறி தொழிலாளி ஒருவர் கூறுகையில், நூல் விலை ஏறிக்கொண்டே சென்றால் எங்களுக்கு வேலை இல்லாமல் சென்று விடும். விசைத்தறி தொழில் நம்பி தான் நாங்களும், எங்களின் குடும்பத்தினரும் உள்ளோம். இதனால் வேலையிழப்பு ஏற்பட்டால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும். முதலாளிகளும் எங்களுக்கு வேலை இல்லை என்று கூறிவிட்டால் மிகவும் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்படுவோம். மேலும் சிறு சிறு விசைத்தறி உரிமையாளர்கள் முதலீடு செய்து இதில் லாபம் ஈட்ட முடியாமல் தறிகளை இரும்பு கடைகளில் போட்டுச் செல்கின்றனர். இதில் அரசு நூல்‌ விலை உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் நெசுவு தொழில் அழிவை நோக்கி சென்று விடும்.

    ஆகையால், அரசு தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நூல் விலையை கட்டுப்படுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளிகளுக்கு வேலையிழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று வேதனையுடன் கோரிக்கை விடுத்தனர்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி