முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் புத்தக திருவிழா.. வாசகர்களை கவரும் லட்சக்கணக்கான புத்தகங்கள்

நாமக்கல்லில் புத்தக திருவிழா.. வாசகர்களை கவரும் லட்சக்கணக்கான புத்தகங்கள்

X
புத்தக

புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள்

Namakkal | நாமக்கல்லில் முதன் முறையாக நடைபெறும் புத்தகத்திருவிழாவில் லட்சக்கணக்கான புத்தகங்கள் புத்தகப்பிரியர்களுக்காக வைக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறும் புத்தகத்திருவிழாவில் லட்சக்கணக்கான புத்தகங்கள் புத்தகப்பிரியர்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. 10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி.சிங் தொடங்கி வைத்தார்.

நாமக்கல்லில் முதல்முறையாக புத்தகத் திருவிழா பிப்ரவரி 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கியது. இதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங், ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள (நல்லிபாளையம்) அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இத்திருவிழா நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட நூலகத்துறை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) ஆகியவை சார்பில், இந்த புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  "தமிழர்கள் சகோதரத்துவத்துடன் பழகுகின்றனர்..." - வடமாநில தொழிலாளர்கள் பேட்டி..!

தனியார் புத்தகப் பதிப்பு நிறுவனங்கள் சார்பில் 80 அரங்குகள், அரசு சார்பில் 20 அரங்குகளும் என மொத்தம் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத் திருவிழாவில் பிரபல பதிப்பக நிறுவனங்களின் சார்பில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புத்தகத் திருவிழாவை காண வரும் வாசகர்களுக்காக தினமும் மாலை, இரவு வேளையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இலக்கிய சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலா் மணிமேகலை, மாவட்ட நூலக அலுவலா் மாதேஸ்வரன், பபாசி தலைவா் வைரவன், செயலாளா் முருகன் மற்றும் அதிகாரிகள் இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், உணவுத் திருவிழா, கலை நிகழ்ச்சிகள், பேச்சு போட்டிகள், அறிவியல் கோளரங்கம், வண்ண மீன்கள் காட்சியகம், புகைப்பட கண்காட்சி ஆகியவை கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

First published:

Tags: Local News, Namakkal