நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே
கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் SSM கல்வி நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இக்கல்லூரி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் முக்கிய ஒன்றாக இருக்கிறது. சுமார் 2,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கு படித்த வருகிறார்கள். இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வருடாவருடம் பல பெரிய நிறுவனங்களோ அல்லது சுயத்தொழில் முனைவார்களாக கல்லூரி படிப்பு முடித்து வெளியே வருகிறார்கள். இங்கு முக்கிய படிப்படியாக டெக்ஸ்டைல் துறைகள் சார்ந்த படிப்புகள் முக்கிய ஒன்றாக இருக்கிறது.
மேலும் கல்லூரியின் சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால் பொறியியல் கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட இளங்கலை பட்டப்படிப்புகளும், 6க்கும் மேற்பட்ட முதுகலை பட்டப்படிப்பும் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு 15க்கும் மேற்பட்ட இளங்கலை பட்டப்படிப்புகளும், 10க்கும் மேற்பட்ட முதுகலை பட்டப்படிப்பும் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தில் சலுகைகள் கிடைப்பெறுகிறது.
அதேபோல் மாணவ மாணவிகளுக்கு தங்கும் விடுதியும், உணவும் வழங்கப்படுகிறது. மேலும் இலவச கல்லூரி பேருந்து வசதிகளும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(NSS) மூலமாக மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று விவசாயத்திற்கு உதவுவது, நோய்கள் பற்றி விழிப்புணர்வு அளிப்பது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமின்றி சமுதாய வானொலியும் இங்கு இருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது.
மேலும் காட்சி தொடர்பியல், டெக்ஸ்டைல், பெட்ரோலியம் இஞ்சினியரிங் என நகர்ப்புறத்திற்கு இணையான பட்டப்படிப்புகளை கொண்டு வந்து குறைந்த கல்வி கட்டணத்தை வைத்து மாணவர்களை ஊக்குவிக்கின்றனர். இந்த கல்லூரியில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் வந்து படிக்கின்றனர்.
பொறியியல் கல்லூரி உள்ள படிப்புகளுக்கு ஒரு வருடத்திற்கு 20,000 முதல் 40,000 வரையிலான துறைகளுக்கு ஏற்றவாறு குறைத்தும், ஏற்றியும் கல்வி கட்டணமாக இருக்கிறது. இதிலும் முதல் பட்டதாரி, நன்றாக படிக்கும் மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது.
இதேபோல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள படிப்புகளுக்கு ஒரு வருடத்திற்கு 10000 முதல் 25000 வரையிலான துறைகளுக்கு ஏற்றவாறு குறைத்தும், ஏற்றியும் கல்வி கட்டணமாக இருக்கிறது. இதிலும் முதல் பட்டதாரி, நன்றாக படிக்கும் மாணவர்கள், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களாக இருக்கும் பட்சத்தில் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இக்கல்லூரி விளிம்பு நிலை மாணவ மாணவிகளுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பல மாணவர்கள் கேம்பஸ் மூலமாக வேலை கிடைத்து வெற்றிகரமாக படிப்பை முடித்து செல்கின்றனர் என்று தெரிவித்தனர்.
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.