Home /namakkal /

நாமக்கல் : குமாரபாளையம் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பு

நாமக்கல் : குமாரபாளையம் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த விசைத்தறியாளர்கள் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை நீக்க கோரியும் இதற்கு கண்டனம் தெரிவித்தும் விசைத்தறியாளர்கள் வரும் 27ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த விசைத்தறியாளர்கள் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை நீக்க கோரியும் இதற்கு கண்டனம் தெரிவித்தும் விசைத்தறியாளர்கள் வரும் 27ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறியாளர்கள் ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல், கூலி உள்ளிட்ட பிரச்னைகளால் குடும்பம் நடத்தவே கடும் பிரச்னையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு மின்சார கட்டணத்தையும் அதிடியாக உயர்ததி உள்ளது.  இதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தையும் திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கைகளும் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறியாளர்கள் உயர்த்தப்பட்ட மின் தடையை நீக்க கோரி போராட்டத்தையும் அறிவித்துள்ளனர். இந்நிலையில், குமாரபாளையம் கொங்கு பவர்லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

Also Read : வாழைக்கு ஊடுபயிராக காய்கறிகள்: நாமக்கல்லில் ஹெக்டருக்கு ரூ.26,250 மானியம்

இதில் மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 27-ந்தேதி முதல் விசைத்தறிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் எனவும், இந்த போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தர கேட்டுக்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது பற்றி தலைவர் சங்கமேஸ்வரன் கூறியதாவது: கொரோனவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு துன்பத்திற்கு ஆளானோம். மேலும் ஏற்கனவே நூல் விலை உயர்வால் தொழில் நசிந்து வருகிறது. இந்நிலையில் மின் கட்டண உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் முற்றிலுமாக இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் ராஜேந்திரன், உதவி தலைவர் குமாரசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Published by:Vijay R
First published:

Tags: Local News, Namakkal

அடுத்த செய்தி