ஹோம் /நாமக்கல் /

பாதுகாப்பு கருதி மூடப்பட்ட குமாரபாளையம் பழைய காவிரி பாலம்.. போக்குவரத்து மாற்றம்..

பாதுகாப்பு கருதி மூடப்பட்ட குமாரபாளையம் பழைய காவிரி பாலம்.. போக்குவரத்து மாற்றம்..

குமாரபாளையம் பழைய காவிரி பாலம்

குமாரபாளையம் பழைய காவிரி பாலம்

Namakkal Latest News | காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதும் அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுவதால் வெள்ள நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு செல்கிறது. குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பழைய பாலம் பாதுகாப்பு கருதி தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Namakkal, India

  காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உபரிநீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கையாக பழைய காவிரி பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாலத்தின் முன்பு காவல்துறையினர் தடுப்பு வைத்து மூடியுள்ளனர்.

  காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதும் அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுவதால் வெள்ள நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு செல்கிறது. இதனால் குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பழைய பாலம் பாதுகாப்பு கருதி தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது.

  தற்போது, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.85 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டு காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்து  ஓடுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் அதிக அளவில் வெள்ள நீர் கரைகளை தாண்டி செல்வதால் வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்து உள்ளது.

  மேலும் படிக்க:  சொந்த வீடு வாங்கவும், சொத்து பிரச்சினை நீங்கவும் திருச்சியில் வழிபட வேண்டிய கோவில்!

  இதனிடையே, குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பழைய காவிரி பாலம் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இப்பாலத்தின் உறுதி தன்மை வலுவிழந்து இருப்பதால் கடந்த பல வருடங்களாக பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பள்ளி செல்பவர்களும், பவானி பகுதி செல்வதற்கு இந்த பாலத்தை கடந்து தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

  மேலும் படிக்க:  புதுக்கோட்டையில் உள்ள 10 முக்கிய சுற்றுலா தலங்கள்

  மேலும் காவிரி ஆற்றில் அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாலத்தின் உறுதி தன்மை கருதியும், மக்கள் வேடிக்கை பார்பதற்காக வழி நெடுகிலும் நிற்கின்றனர். சில நபர்கள் காவிரி ஆற்றில் குதித்து சாகசமும்  செய்வதால், இதனை தடுக்கவும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்கவும் பழைய பாலம் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது. இதனால் பவானி செல்பவர்கள் காவிரி நகர் பாலம் வழியாகவும், புறவழிச்சாலை பாலம் வழியாகவும் சுமார் 3 கிலோமீட்டர் சுற்றி சென்று வருவதால் இருச்சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிச் செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  செய்தியாளர்: மதன், நாமக்கல்

  Published by:Arun
  First published:

  Tags: Local News, Namakkal