Home /namakkal /

Namakkal | காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூடப்பட்ட குமாரபாளையம் பழைய பாலம்

Namakkal | காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூடப்பட்ட குமாரபாளையம் பழைய பாலம்

குமாரபாளையம் பாலம்

குமாரபாளையம் பாலம்

காவிரி வெள்ளம் காரணமாக குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பழைய பாலம் பாதுகாப்பு கருதி தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. தற்போதும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ள நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு செல்கிறது. இதனால் குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பழைய பாலம் பாதுகாப்பு கருதி தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது.

    தற்போது, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.80 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டு காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்து கொண்டு ஓடுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சற்று குறைந்து இருந்தாலும் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் அதிக அளவில் வெள்ள நீர் கரைகளை தாண்டி செல்வதால் வீடுகளுக்கு புகுந்த வெள்ள நீர் தேங்கி உள்ளது.

    குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பழைய காவிரி பாலம் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இப்பாலத்தின் உறுதி தன்மை வலுவிழந்து இருப்பதால் கடந்த பல வருடங்களாக பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடைச் செய்யப்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பள்ளிச் செல்பவர்களும், பவானி பகுதி செல்வதற்கு இந்த பாலத்தை கடந்து தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

    இதனிடையே காவிரி ஆற்றில் அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாலத்தின் உரிது தன்மை கருதியும், மக்கள் வேடிக்கை பார்பதற்காக வழி நெடுகிலும் நிற்கின்றனர். சில நபர்கள் காவிரி ஆற்றில் குதித்து சாகசமும் செய்து செய்வதால், இதனை தடுக்கவும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்கவும் பழைய பாலம் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது. இதனால் பவானி செல்பவர்கள் காவிரி நகர் பாலம் வழியாகவும், புறவழிச்சாலை பாலம் வழியாகவும் சுமார் 3 கிலோமீட்டர் சுற்றி சென்று வருவதால் இருச்சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிச் செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி