நூற்றுக்கும் அதிகமான பரோட்டா கடை ஊரில் இருந்தாலும். ஒரு சில கடைகளில் பரோட்டா மற்றும் அதன் குழம்பு சுவை மட்டும் அவ்வளவு அருமையா தனித்துவமா இருக்கும். அதுலயும் குறிப்பாக சொல்லனும்னா மாசிலாமணி ஹோட்டலின் சுவை அடிச்சுக்க முடியாது என்று கூறுகிறார்கள் இந்த கடைக்கு திரும்ப திரும்ப வரும் வாடிக்கையாளர்கள்.
மேலும் இந்த ஹோட்டல் இவ்வூரில் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. அதுவும் ‘செட்டிநாடு உணவுகள்’ என கேட்டாலே இந்த ஹோட்டலை தான் பெரும்பாலானோர் கை காட்டுகிறார்கள். ஏனென்றால் இங்கு சமைக்கும் உணவுகள் செட்டிநாடு ஸ்டைலில் சமைக்கப்படுகின்றன. குறிப்பாக செட்டிநாடு புரோட்டா வகைகளே அதிமாக உள்ளது என்று கூறுகின்றனர். இதற்காகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரத்யேகமாக சமையல் மாஸ்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஹோட்டல் குறித்தும் அதன் உணவுகள் குறித்தும் உரிமையாளர் மாசிலாமணி கூறுகையில், “ கடந்த 15 ஆண்டுகளாக இந்த கடையை நான் நடத்தி வருகிறேன். அதற்கு முன்னதாகவே 20 ஆண்டுகள் சமையல் மாஸ்டராக வேலை செய்து அதன் பின் கடின முயற்சி மூலம் இன்று 20 பேருக்கு மேல் நான் ஓனராக இருக்கிறேன். இதற்கு காரணம் எனது சமையல் சுவை மட்டுமே. தற்போது இருக்கும் சமையல் மாஸ்டர்கள் அதே போல் தான். அதனால் தான் இத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.
மேலும் பாட்டி காலத்து சமையல் போன்றும், செட்டிநாடு சமையலும் நமது ஹோட்டல் பிரபலமாக உள்ளது. குறிப்பாக புரோட்டா வகைகளான பன் புரோட்டா, செட்டிநாடு புரோட்டா, என பல வகைகள் உள்ளது. அதுமட்டுமின்றி பாட்டிக் காலத்து சமையல் முறையில் குழம்பு வகைகள் வைப்பதும் மூலம் ஹோட்டலுக்கு இன்னும் பெருமை. இதனாலே வாடிக்கையாளர் சுவை தேடி வருகின்றனர்.
உழைத்தால் நிச்சயமாக ஒரு இடத்தில் அமர முடியும். அன்று நான் பல வருடங்களாக சமையல் மாஸ்டராக இருந்தேன். இன்று ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு அதுவும் உரிமையாளராக இருக்கிறேன் என்று பெருமையுடன் தெரிவித்தார்.
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.