Home /namakkal /

Namakkal News : ஆபத்தான நிலையில் ஆனங்கூர், ஆண்டிக்காடு, அண்ணா நகர் பேருந்து நிறுத்த நிழற்குடைகள் - விபத்து அபாயம்!

Namakkal News : ஆபத்தான நிலையில் ஆனங்கூர், ஆண்டிக்காடு, அண்ணா நகர் பேருந்து நிறுத்த நிழற்குடைகள் - விபத்து அபாயம்!

நாமக்கல்

நாமக்கல்

Namakkal Latest News : நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகிலுள்ள ஆனங்கூர், ஆண்டிக்காடு, அண்ணா நகர் பேருந்து நிறுத்த நிழற்குடைகள் ஆபத்தான நிலையில் இருப்பதால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து குமாரபாளையம் செல்லும் வழியில் ஆனங்கூர், ஆண்டிக்காடு, அண்ணா நகர் போன்ற ஊர்கள் அமைந்துள்ளன . இங்கு அரசு பேருந்துகள் நின்று செல்வதற்காக  பேருந்து நிறுத்தங்களும் உள்ளன. இவ்வூர்களை சேர்ந்த மக்கள், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் நிழற்குடைகளில் நின்று பேருந்துக்காக காத்திருந்து ஏறிச் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில், இங்குள்ள பயணியர் நிழற்குடைகள் பல ஆண்டுகளுக்கு முன்னர்கட்டப்பட்டவை என்பதால் நிழற்குடை சுவர்கள் மிகவும் பழுதடைந்த கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு சேதமடைந்து எந்நேரமும் இடிந்து தலையில் விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

    மேற்கூரை இடிந்து விழும் நிலையில் பேருந்து நிழற்குடை..


    மேலும் சில நிழற்குடைகள் இரும்பு தகரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக இருக்கிறது. அதுவும் மிகவும் துருப்பிடித்து, ஆங்காங்கே இரும்பு தூண்கள் பழுதடைந்து தகரம் பிளந்து காணப்படுகிறது. இதனால் பலத்த காற்று வீசினால் நிழற்குடை சாய்ந்து விழும் நிலை உள்ளது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மிகவும் அச்சத்துடனே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதிகளைச் சேர்த மக்கள் கூறுகிறார்கள்.

    துருப்பிடித்த நிலையில் பேருந்து நிழற்குடை..


    துருப்பிடித்த நிலையில் பேருந்து நிழற்குடை..


    மேலும், இந்த வழியாக  ஒரு சில அரசுப் பேருந்துகள் மட்டுமே சென்று வருகின்றன . இதனால் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. அவ்வாறு காத்திருக்கும்போது   நிழற்குடை  இடிந்து விழுந்து ஏதாவது விபத்து ஏற்பட்டு விடும் என்ற பயம் மனதில் தோன்றுவதாக பேருந்துக்காக காத்திருப்போர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    நிழற்குடைகள் திடீரென இடிந்து விழுந்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும். எனவே, இதனை இடித்துவிட்டு சீரமைத்து புதிய பேருந்து நிழற்குடைகள் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி