ஹோம் /நாமக்கல் /

பெண்களை கவர்ந்த கூடாரவல்லி திருவிளக்கு பூஜை.. நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் கோலாகலம்..

பெண்களை கவர்ந்த கூடாரவல்லி திருவிளக்கு பூஜை.. நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் கோலாகலம்..

X
நாமக்கல்

நாமக்கல்

Namakkal Aranganathar Temple : நாமக்கல் அரங்கநாதர் திருக்கோவிலில் கூடாரவல்லி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 300க்கும்‌ மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோவில் படிகளில் திருவிளக்கு ஏந்தி பூஜை செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் மார்கழி 27ம் நாள் கூடாரவல்லி நிகழ்ச்சி அதிகாலை பக்தர்கள் பஜனையுடன், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்பின் மாலை நேரம் கோவில் படிக்கட்டுகளில் விளக்கேற்றி மலைக்கோட்டையை சுற்றி வலம் வருவர். அந்த வகையில், இன்று நாமக்கல் இந்து சமய பேரவை திருப்பாவை குழு சார்பில் 52ம் ஆண்டு கூடாரவல்லி, பல்லாண்டு படி விழா மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. அதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணியளவில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது. அதில், பல்வேறு மலர்களால் கூடாரம் அமைத்து, அதில் அரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனைத்தொடர்ந்து மாலை நேரம் அரங்கநாதர் கோவில் படிவாசலில், பெண்கள் வாழையில் குத்து விளக்கு தீபம் ஏற்றி வைத்து பல்லாண்டு படி விழா நடந்தது. இந்த கூடாரவல்லி திருவிளக்கு பூஜையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு விளக்கு பூஜை செய்து அரங்கநாதரை வழிபட்டனர்.

First published:

Tags: Local News, Namakkal