முகப்பு /நாமக்கல் /

கத்தியால் உடலில் கீறி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.. ராசிபுரத்தில் வினோத வழிபாடு..

கத்தியால் உடலில் கீறி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.. ராசிபுரத்தில் வினோத வழிபாடு..

X
கத்தியால்

கத்தியால் உடலில் கீறி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Namakkkal News | ராசிபுரம் அருகே  சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.  இதில்100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு உடலை கத்தியால் கீறி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தொப்பப்பட்டி ஜேடர்பாளையம் ஸ்ரீசௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிவு பெற்ற நிலையில் கோவில் நந்தவனத்தில் இருந்து அம்மனுக்கு சக்தி அழைக்கப்பட்டது.இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 100க்கும் மேற்பட்டோர் கத்தியால் தங்கள் கைகள், மார்பகங்களில் வெட்டிக்கொண்டு அம்மனை அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், கத்திபோடும்போது மார்பகங்களில் ஏற்படும் காயங்களுக்கு திருமஞ்சன பொடி தூவியும், திருமஞ்சன பொடி தூவுவதால் காயமானது 3 நாட்களில் மறைந்துவிடும் என்ற நம்பிக்கையும் இம்மக்களிடம்உள்ளது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

top videos
    First published:

    Tags: Local News, Namakkal