முகப்பு /நாமக்கல் /

ராசிபுரம் போதமலை கள்ளவழி கருப்பனார் கோவிலில் 5000 பேருக்கு கிடா வெட்டி சமபந்தி விருந்து..

ராசிபுரம் போதமலை கள்ளவழி கருப்பனார் கோவிலில் 5000 பேருக்கு கிடா வெட்டி சமபந்தி விருந்து..

தயாராகும் விருந்து

தயாராகும் விருந்து

Rasipuram Pothamalai Karuppan Temple | மழைவாழ் மக்களுக்கான போதமலை கள்ளவழி கருப்பணார் கோவிலில் ஆண்கள் மட்டுமே சென்று வழிபட வேண்டும். மழைவாழ் குடும்பத்தினர் தான் பூசாரியாகவும் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி ஒட்டியுள்ள போதமலை தொடர்ச்சியில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பணார் கோவில் உள்ளது.

மழைவாழ் மக்களுக்கான இந்த கோவிலில் ஆண்கள் மட்டுமே சென்று வழிபட வேண்டும். மழைவாழ் குடும்பத்தினர் தான் பூசாரியாகவும் உள்ளனர். இங்கு வருடம்தோறும் தைமாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி சமாபந்தி விருந்து வைக்கப்படும்.

இதையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு சமபந்தி விருந்துக்கான பூஜைகள் தொடங்கின. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த பூஜையின் முடிவில், 1000கிலோ ஆட்டு இறைச்சி, 1200 கிலோ பன்றி இறைச்சி, 120கிலோ கோழி இறைச்சி வைத்து முப்பூஜை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் ஆடு, பன்றி, சேவல்களை பலியிட காணிக்கையாக கொடுத்தனர். தொடர்ந்து பசிறுமலை அடிவாரத்தில் உள்ள வயலில் சமபந்தி விருந்துக்கான சமையலை 50 க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே செய்தனர்.இதில் சுமார், 2320 கிலோ இறைச்சி சமைக்கப்பட்டது. இதில், 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விருந்து சாப்பிட்டு சென்றனர்.

First published:

Tags: Local News, Namakkal