முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் முருகன் கோயிலில் சஷ்டி திருவிழா..! கண்ணை கவர்ந்த கொங்கு ஒயிலாட்டம்..!

நாமக்கல் முருகன் கோயிலில் சஷ்டி திருவிழா..! கண்ணை கவர்ந்த கொங்கு ஒயிலாட்டம்..!

X
நாமக்கல்

நாமக்கல் முருகன் கோயில் சஷ்டி திருவிழா

Namakkal Murugan Kovil Festival | நாமக்கல் அருகே முருகன் கோயிலுக்கு ஒரே வண்ண உடையணிந்து ஒயிலாட்டத்துடன் தீர்த்தக் குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்ற நிகழ்வு பார்ப்போரை கவரும் வகையில் அமைந்தது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் அடுத்துள்ள மோகனூரில் உள்ள புகழ்பெற்ற காந்தமலை பாலசுப்பிரமணியம் சாமி கோவிலுக்கு சஷ்டி திருநாளை முன்னிட்டு காட்டூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்கிருந்து தீர்த்த குடத்துடன் ஊர்வலமாக புனித நீர் எடுத்துச் சென்றனர்.

மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக காட்டூருக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் ஒரே வண்ண உடையணிந்து ஆண்கள் மற்றும் பெண்கள் கொங்கு பாராம்பரிய ஒயிலாட்டமும் காவடி ஆட்டத்துடனும் ஊர்வலமாக சென்றனர். பாராம்பரிய நாட்டு மாடுகளும் குதிரையுடனும் பக்தர்கள் ஊர்வலம் வந்தது கண்களை கவரும் விதமாக இருந்தது.

நாமக்கல் முருகன் கோயில் சஷ்டி திருவிழா

பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த புனித நீரை கொண்டு காந்தமலை பாலசுப்பிரமணியம் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் காட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Namakkal