முகப்பு /நாமக்கல் /

ஜேடர்பாளையம் அணை திறப்பு.. பரமத்திவேலூர் ராஜா வாய்க்கால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி..

ஜேடர்பாளையம் அணை திறப்பு.. பரமத்திவேலூர் ராஜா வாய்க்கால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி..

X
ஜேடர்பாளையம்

ஜேடர்பாளையம் அணை திறப்பு

Namakkal News | பரமத்திவேலூர் ஜேடர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள படுகை அணையில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் 15 நாட்கள் தவிர வருடம் முழுவதும் தண்ணீர் திறக்கப்படும்.  

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் பகுதியில் அல்லாள இளைய நாயகர் கட்டிய சிறப்பு வாய்ந்த படுகை அணை அமைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து 81 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அணையின் இடது புறத்தில் இருந்து ராஜா வாய்க்கால் துவங்குகிறது. ராஜா வாய்க்கால்களில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ராஜா வாய்க்கால் மூலம் 16,150 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுக்கு 15 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று மீதமுள்ள 350 நாட்களும் இந்த ஜேடர்பாளையம் படுகை அணையிலிருந்து பாசனத்திற்காக ராஜாவாய்க்காலின் மூலம் தண்ணீர் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. பாசன வசதிக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங், படுகை அணையின் மதகுகளை திறந்து வைத்தார்.

வினாடிக்கு 235 கன அடி நீர் இதன் மூலம் திறந்து விடப்படுகிறது. தண்ணீர் திறந்து விட்டதையடுத்து இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் காவிரி அன்னைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், ராஜா வாய்க்கால் விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Namakkal