Home /namakkal /

நாமக்கல் மக்களின் சுற்றுலாத்தலம்: மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஜேடர்பாளையம் ராஜா வாய்க்கால் பற்றித் தெரியுமா?

நாமக்கல் மக்களின் சுற்றுலாத்தலம்: மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஜேடர்பாளையம் ராஜா வாய்க்கால் பற்றித் தெரியுமா?

ஜேடர்பாளையம் அணை

ஜேடர்பாளையம் அணை

நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கும் ஜேடர்பாளையம் படுகை அணையின் ராஜா வாய்க்கால் எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே ஜேடர்பாளையம் என்ற‌ ஊர் உள்ளது. இப்பகுதியில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பரமத்தி பகுதியில் ஆட்சிபுரிந்த சிற்றரசரான அல்லாள இளைய நாயக்கர் அவரது ஆட்சிக் காலத்தில் மக்களுடைய நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

    இவருடைய ஆட்சி காலத்தில் விவசாயப் பயன்பாட்டிற்காக மேட்டூரில் இருந்து இவ்வூர் வழியாக செல்லும் காவிரி ஆற்றின் அருகே அப்போது காலக்கட்டத்தில் மனித உழைப்பை மட்டுமே பயன்படுத்தி ராஜவாய்க்கால் இவர் மூலம் வெட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பாசன வசதி கிடைக்க பெறும் வகையில் இந்த வாய்க்கால் அமைக்கப்பட்டது.

    ஜேடர்பாளையம் அணை


    அதன் பின் 1947 ஆம் ஆண்டு இங்கு படுகை அணை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 1949-ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு விவசாயப் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஜேடர்பாளையம் அணை


    தற்போது இந்த படுகை அணை மூலம் இன்றும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிப்பதுடன், ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது.

    ஜேடர்பாளையம் அணை


    இந்த ராஜா வாய்க்கால் மற்றும் படுகை அணை மொத்தம் 496 மீட்டர் நீளம் கொண்டுள்ளது. மேலும் இத்தடுப்பணை மேட்டூரில் இருந்து 51 வது கிலோமீட்டர் தொலைவில் ஜேடர்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

    இப்பகுதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது. கோடைக்காலம், விசேஷ காலங்களில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை புரிந்து மகிழ்வுடன் இருப்பதற்கு ஒரு சிறந்த பகுதியாக இருக்கும். மேலும் சிறுவர், சிறுமியர் விளையாடுவதற்கு பூங்கா பகுதியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி