முகப்பு /நாமக்கல் /

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

Jacto Geo Protest | நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  • Last Updated :
  • Namakkal, India

அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் (ஜாக்டோ-ஜியோ) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசின் 2023-24ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டம், அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவது, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை இதனை கண்டித்தும் புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்.

ஆசிரியர், அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும், பட்டப்படிப்பு, ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்யும் உரிமையை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

top videos
    First published:

    Tags: Local News, Namakkal