முகப்பு /நாமக்கல் /

தர்பூசணி ஒரு இயற்கை வயாகராவா? ஆச்சர்ய தகவலை விவரிக்கும் நாமக்கல் வியாபாரி..

தர்பூசணி ஒரு இயற்கை வயாகராவா? ஆச்சர்ய தகவலை விவரிக்கும் நாமக்கல் வியாபாரி..

X
தர்பூசணி

தர்பூசணி ஒரு இயற்கை வயாகரா வா? 

Namakkal News | நாமக்கல் நல்லிபாளையத்தில் கோடை  வெயிலின் காரணமாக பொதுமக்களின் உடல் வெப்பத்தை தணிக்கும்  தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் நல்லிபாளையத்தில் உள்ள ஒரு நர்சரியில் கோடை வெயிலின் காரணமாக பொதுமக்களின் உடல் வெப்பத்தை தணிக்கும் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இந்த கடையை நடத்தி வருபவர் கலைக்கோபன் தனது சொந்த இடத்தில் தர்பூசணியை பயிரிட்டு அதனை விற்பனை செய்து வருகிறார். மேலும் இந்த பழத்தில் உள்ள நன்மைகள் குறித்து அவர் நமக்கு விவரித்தார். தர்பூசணி பழத்தின் இவ்வளவு இயற்கை அற்புதங்கள் அமைந்துள்ளதா? என நாமும் வாயடைத்து போனோம்.

இதுகுறித்து, கலைக்கோபன் கூறுகையில், “தர்பூசணி 90% தண்ணீரை கொண்டது. இது கோடையில் ஏழை, எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஏனென்றால் நிறைந்த நன்மைகளை குறைந்த செலவில் உட்கொள்ளலாம். இந்த பழம் இயற்கையாகவே நீர் மற்றும் இனிப்பை கொண்டதோடு அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. மீண்டும் வேலை வாய்ப்பு!

மேலும், தர்பூசணியில் இரும்பு சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது நம் உடலுக்கு அதிக நன்மையை கொடுக்கிறது. தர்பூசணிக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது என்னவென்றால் இயற்கை வயாகரா ஆகும். ஏன் இதை இயற்கை வயகரா என்று சொல்கிறார்கள் என்றால் அரியவகை சிட்ருலின் புரதச்சத்து அதிக அளவில் இருப்பதால் இதை இயற்கை வயகரா என்று பொருள் வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Namakkal