முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி.. 1,500 மாணவிகள் பங்கேற்பு..

நாமக்கல்லில் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி.. 1,500 மாணவிகள் பங்கேற்பு..

X
வீராங்கனைகள்

வீராங்கனைகள்

Namakkal District | நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலுள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இதில்1,500 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எளையம்பாளையத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் ”விகாஸ் ஸ்போர்ட்ஸ் டிராபி 2023- என்ற பெயரில் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. பல்வேறு மாவட்டத்தில் இருந்து கல்லூரி மாணவிகள் வந்து இந்த போட்டிகளில் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர்.

வாலி பால், ஹேண்ட்பால், கபடி, த்ரோபால், கோ- கோ, தடகள போட்டிகள் ஆகியவை நடைபெற்று வருகிறது. கல்லூரி சேர்மன் பேராசிரியர் மு.கருணாநிதி தலைமை வகித்து விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

1,500 மாணவிகள் கலந்து கொண்டு விளையாடும் பல்வேறு போட்டிகளின் ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் பேபி சகிலா சிறப்பாக செய்துள்ளதாக விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவந்த மாணவிகள்தெரிவித்தனர். நிகழ்ச்சி மேலாளர் டி. ஸ்ரீ தர்ம ராஜா, விளையாட்டு ஆசிரியர்கள் சதீஷ், கீதா உள்ளிட்டவர்கள் இந்த போட்டிகளை கண்காணித்து வருகிறார்கள்.

First published:

Tags: Local News, Namakkal