Home /namakkal /

நாமக்கல் : வைகாசி விசாக தேர்த்திருவிழா கடைகள் அமைக்கும் பணி மும்முரம்!

நாமக்கல் : வைகாசி விசாக தேர்த்திருவிழா கடைகள் அமைக்கும் பணி மும்முரம்!

வைகாசி

வைகாசி விசாக தேர்த்திருவிழா கடைகள் அமைக்கும் பணி மும்முரம்!

புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வைகாசி விசாக தேர்த்திருவிழா இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வைகாசி விசாக தேர்த்திருவிழா இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர்த்திருவிழா வருடாவருடம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்த்திருவிழா நடத்தப்படவில்லை. தற்போது இந்தாண்டு தேர்த்திருவிழா சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா தொடங்க உள்ளதால் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இந்த வைகாசி விசாக தேர்த்திருவிழாவில் தேர் கடைகளுக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உள்ளது. நூற்றுக்கணக்கான பொம்மை கடைகள், உணவு வகை கடைகள் என பல்வேறு விதமான கடைகள் இடம்பெறும். தற்போது இதற்காக கடைகள் அமைக்கும் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு மும்முரமாக நடந்து வருகிறது.

    தேர்த்திருவிழா முடிந்த பின்பும் ஒரு மாதம் காலம் வரை தேர் கடைகள் செயல்பட்டு வரும்.தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தேர் கடைகள் சுற்றிப் பார்க்க வருகை புரிவார்கள். ஏனென்றால் அவ்வளவு வித்தியாசமான பொம்மை கடைகள் முதல் திண்பண்டம் கடைகள் வரை இடம் பெற்றி இருக்கும்.

    மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா தொடங்கப் பட உள்ளதால் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்களிடையே மிகுந்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதிலும் தேர்கடைகளை நீண்ட நாட்களுக்கு பிறகு சுற்றி பார்க்க உள்ளோம். இதுவே மிகவும் ஆர்வமாக உள்ளது. தற்போது இதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்று தெரிவித்தனர்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி