முகப்பு /நாமக்கல் /

பார்வை குறைபாடு உடைய ஆசிரியர்களுக்கு நாமக்கல்லில் சிறப்பு திறன் பயிற்சி..

பார்வை குறைபாடு உடைய ஆசிரியர்களுக்கு நாமக்கல்லில் சிறப்பு திறன் பயிற்சி..

X
பார்வை

பார்வை குறைபாடு உடைய ஆசிரியர்களுக்கு நாமக்கல்லில் சிறப்பு திறன் பயிற்சி

Namakkal News | நாமக்கல்லில் பார்வை குறைபாடு உடைய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மற்றும் ஹோப் பவுண்டேஷன் இணைந்து அரசு பள்ளிகளில் பணியாற்றும் பார்வை திறன் குறைபாடு உடைய ஆசிரியர்களுக்கு சிறப்பு ICT திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி தலைமையில் மாவட்ட திட்ட அலுவலர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இப்பயிற்சியானது நேற்றும் (23.02.2023), இன்றும் (24.02.2023) நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு ஆவரங்காடு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் சுரேஷ் மற்றும் ஹோப் பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் அதிபன் மற்றும் ஆரோக்கிய செல்வ மேரி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு விசைப்பலகை நோக்கு நிலை, விண்டோஸ் இயக்க முறைகளை புரிந்து கொள்ளுதல், கோப்புகள் மற்றும் கோப்புறை மேலாண்மை,TNSED, MS WORD, POWER POINT, EXCEL, ஆன்லைன் மீட்டிங்கில் கலந்து கொள்வது ஆகியவை பற்றி விளக்கம் கொடுத்தனர். இப்பயிற்சியை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரா.சுமதி ஒருங்கிணைத்தார். இப்பயிற்சியின் மூலம் 33 ஆசிரியர்கள் பயனடைவர்.

First published:

Tags: Local News, Namakkal