ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் தொழிற்சாலைகளின் உரிமத்தை ஆன்லைனில் புதுப்பிக்க அறிவுறுத்தல்.. முழு விவரம்

நாமக்கல் தொழிற்சாலைகளின் உரிமத்தை ஆன்லைனில் புதுப்பிக்க அறிவுறுத்தல்.. முழு விவரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Namakkal Latest News | நாமக்கல் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் ஆன்லைனில் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தினகரன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் ஆன்லைனில் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிற்சாலை தொடர்பான விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவேற்றம் முழுமையாக முடித்த, சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஏற்காடு, மேட்டூர், சங்ககிரி, இடைப்பாடி ஆகிய தாலுகா மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், உரிமத்தை ஆன்லைன் மூலமாக

மட்டுமே வரும், 31க்குள் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.

உரிமம் புதுப்பிக்க http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில், உரிம கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்ப படிவங்களுக்கு தாமத கட்டணம் செலுத்த நேரிடும்.

உரிய தேதிக்குள் உரிம கட்டணத்தை கட்டத் தவறினால், நவம்பர் 30 வரை 10 சதவீதம், டிசம்பர் வரை 20 சதவீதம், அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, 30 சதவீதம் தாமத கட்டணம், உரிம கட்டணத்துடன் கூடுதலாக செலுத்த நேரிடும்.

Must Read : விஜய்சேதுபதி பட சூட்டிங் ஸ்பாட் இதுதானா! - அட இது நம்ம புதுக்கோட்டையில தாங்க இருக்கு!

இதுவரை தொழிற்சாலை தகவல்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாத நிர்வாகத்தினர், http://dish.tn.gov.in/DISHMIG என்ற இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும். இதை அலுவலகத்தில் ஒப்புதல் பெற்று, உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஒப்பந்த தொழிலாளர் சட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர் சட்ட பதிவு, சான்றுகள், வரைபட ஒப்புதல்களுக்கு இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Factory, Local News, Namakkal