முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் துவக்கம்..!

நாமக்கல்லில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் துவக்கம்..!

X
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் PRD ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்தும்

Namakkal basket ball competition | நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெறும் போட்டிகளை நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதா அவர்கள் துவக்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal | Namakkal

நாமக்கல்லில் நடைபெறும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் ஏராளமானோர் ஆர்வமாக பங்கேற்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் PRD ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்தும் 23-ம் ஆண்டாக மாநில அளவிலான ஆடவர் மற்றும் மகளிர் கூடைப்பந்து போட்டிகள் இன்று தொடங்கி வரும் 5-ம் தேதி வரை நடைபெறுகின்றன.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெறும் போட்டிகளை நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதா அவர்கள் துவக்கி வைத்தார். மாநில அளவிலான போட்டிகளில் நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, சென்னை, திருச்செங்கோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.

ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் போட்டியில் பங்கேற்றுள்ளன. இரவு, பகல் என இருவேளைகளில் நடைபெறும் போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 60 ஆயிரம் ரூபாயும் 2-ம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், 3-ம் பரிசாக 40 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் சென்னை அரைஸ் அணியும், ஈரோடு எல்,எம்,ஆர் அணியும் விளையாடிதில் சென்னை அரைஸ் அணி 86 - 59 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் நாமக்கல் பேஸ்கட் பால் கிளப் அணியும் சேலம் ஸ்பார்க் அணியும் விளையாடியதில் சேலம் ஸ்பார்க் அணி 67 - 46 என்ற புள்ளி கணக்கில் நாமக்கல் அணியை வீழ்த்தியது.

First published:

Tags: Basket ball, Local News, Namakkal, Sports