முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் சாதிய கொடுமை.. பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு தடை!

நாமக்கல்லில் சாதிய கொடுமை.. பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு தடை!

ஆட்சியரிடம் மனு அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

ஆட்சியரிடம் மனு அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Namakkal | நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக்குறிச்சி பெரிய மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் உள்ளே சென்று வழிபட மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லில் பட்டியலின மக்களை கோயிலுக்கு நுழைய விட மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி பெரிய மாரியம்மன் கோவிலில் பட்டியல் இன மக்கள் உள்ளே சென்று வழிபட தடுக்கும் நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பழ. மணிமாறன் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் பேளுக்குறிச்சி பேரூராட்சியில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் பேளுக்குறிச்சி பெரிய மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் உள்ளே சென்று வழிபடுவதை தடுக்கும் ஒரு சில நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மேலும் அந்த நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபடுவதை தடுக்கும் பேளுக்குறிச்சி காவல் நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோவிலின் பட்டியலின மக்கள் உள்ளே சென்று வழிபட பாதுகாப்பு வழங்க கோரியும் அந்த மனுவில்வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Namakkal