Home /namakkal /

பள்ளிபாளையத்தில் சாய பட்டறைகளுக்கு சீல்.. முட்டை விலை உயர்வு.. நாமக்கல் மாவட்ட செய்திகள்..

பள்ளிபாளையத்தில் சாய பட்டறைகளுக்கு சீல்.. முட்டை விலை உயர்வு.. நாமக்கல் மாவட்ட செய்திகள்..

நாமக்கல் மாவட்டத்தில் (25.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (25.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

Namakkal District: நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

  நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்..

  நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 445 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 15 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக உயர்ந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

  ஓடும் அரசு பேருந்தில் நடத்துனருக்கு திடீரென  நெஞ்சுவலி.

  ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பகுதியை சேர்ந்த லோகுசாமி என்பவர் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஓடும் அரசு பேருந்தில் நடத்துனருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அப்போது செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  சீல் வைக்கப்பட்ட சாய பட்டறைகள்

  பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் சாய பட்டறைகளில், பெரும்பாலானவை சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுகின்றன. இவை ஆற்றில் கலந்து தண்ணீர் மாசடைகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் முறையாக சுத்திகரிக்காத, சாய கழிவு நீரை வெளியேற்றிய சாய பட்டறைகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்
  வருவாய்த்துறையினர் சீல் வைத்து நடவடிக்கை.

  கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

  நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் யாதேஸ் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே யாதேஸ் தனது வீட்டுக்கு அருகே உள்ள பழமையான கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அந்த கிணற்றில் தற்போது அதிகளவில் தண்ணீர் இருந்ததாக தெரிகிறது. இதில் கிணற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த யாதேஸ் திடீரென நீரில் மூழ்கிய சிறுவன் இருந்துள்ளார்.

  விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்

  கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் நூல் விலை உயர்ந்து வருவதை கண்டித்து விசைத்தறி தொழிலாளர்கள், ஜவுளி தொழிலாளர்கள் நூல் விலையை கட்டுப்படுத்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் நாமக்கல் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  சட்ட விழிப்புணர்வு முகாம்

  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு
  மாவட்ட நீதிமன்றம் குமாரபாளையம் செந்தூர் பவுண்டேசன் மகளிர் சுய உதவிகுழு பெண்களுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் குமாரபாளையம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான சட்டம் சார்ந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது. மேலும் விபத்தைத் தவிர்ப்போம் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சாலைகளில் விபத்து இல்லாமல் நாம் எப்படி பயணம் செல்லலாம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும் பொதுமக்களுக்கும் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

  ரத்த தான முகாம்

  ராசிபுரம் அரசு மருத்துமனை ரத்த வங்கி, மற்றும் ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவச் சங்கம், சுகம் மருத்துவமனை ஆகியவை இணைந்து அன்மையில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது. இந்த ரத்த தானம் முகாமில் 30 பேர் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர்.

  சந்தேக நபர்களின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை

  நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் திருடிய வழக்கில் சந்தேகத்திற்குரிய இரு நபர்கள் குறித்த புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டனர். இந்த நபர்கள் யாரு எனும் தகவல் தெரிந்தால் காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும். எனவும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  கோயில் திருவிழா முன்னிட்டு குண்டம் இறங்கும் நிகழ்வு

  நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டி புதூரில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் மாவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் அம்மனுக்கு நடைபெற்றது. இதனையடுத்து அலகு குத்தும் நிகழ்ச்சியும், தீமிதி விழாவும் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

  பெண் தூக்கிட்டு தற்கொலை

  ஆவல்நாயக்கன்பட்டியில் வசித்து வரும் வரதராசு என்பவரின் மனைவி கஸ்தூரி வீட்டில் தனியாக இருந்த தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி கஸ்தூரி இறந்தார். இதுதொடர்பாக வரதராசு நாமக்கல் காவல் துறையினர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Published by:Arun
  First published:

  Tags: Namakkal

  அடுத்த செய்தி